Our Feeds


Thursday, August 13, 2026

Zameera

நாளை நடைபெறவுள்ள பௌதிகவியல் வினாத்தாள் இன்று வேறு பெட்டியில் கண்டுபிடிப்பு


 அம்பாலாந்தோட்டையில் உள்ள உயர்தரப் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்தில், நாளை (14) நடைபெறவுள்ள பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் இன்று (13) நடைபெற்ற வினாத்தாள் பொதிகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணையை ஆரம்பித்துள்ளது.

தற்போது உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியிலிருந்தே நாளைய பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், குறித்த வினாத்தாள் பொதிகள் திறக்கப்படவோ அல்லது அவற்றிலுள்ள வினாத்தாள்கள் வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »