Our Feeds


Tuesday, August 11, 2026

ShortNews

சிறை மோதல்களுக்கு பல காரணங்கள் உள்ளன - அமைச்சர் நளிந்த!


சிறைகளில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களுக்கு பல்வேறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கான தீர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் கைதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதலின்போது இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் 61 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் நேற்று (10) பொலிஸ் காவலில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் 925 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குருவிட்ட சிறைச்சாலை மோதல் தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

இச்சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், சம்பவங்களுக்கிடையில் தொடர்புகள் உள்ளனவா மற்றும் வெளித் தரப்பினரின் தலையீடு காணப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »