Our Feeds


Sunday, August 30, 2026

ShortNews

பிரதேச சபை அனுமதியின்றி அடாத்தாக அமைக்கப்படும் கந்தரோடை பௌத்த மத்திய நிலையம் - நடந்தது என்ன?


வலி.தெற்கு சுன்னாகம் பிரதேச சபையின் உரிய அனுமதியின்றி கந்தரோடை விகாரைக் காணிக்குள் பௌத்த மத்திய நிலையம் அடாத்தாக அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

சுமார் 4 பரப்பு விஸ்தீரனம் உள்ள கந்தரோடை விகாரை காணியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு குறித்த பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் பிரதேச சபை அனுமதியின்றி கட்டப்படும் கட்டடத்தை நிறுத்துமாறு அறிவித்தல் ஒட்டியிருந்த நிலையில் குறித்த கட்டுமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மீண்டும் குறித்த பௌத்த மத்திய நிலையக் கட்டுமானம் வெளியார் பார்க்காத வகையில்  உயரமாக மறைப்புச் செய்யப்பட்டு மீண்டும் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சாதாரண மக்களின் கட்டுமானங்கள் அனுமதியின்றி அமைக்கப்படும் போது அதனை நீதிமன்றம் மூலம் அகற்றும் பிரதேச சபைகள், குறித்த தியான மண்டபம் உரிய அனுமதிகள் பெறப்படாது அமைக்கப்படுவருவதை கண்டும் காணாமல் இருக்கிறதா?

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »