Our Feeds


Sunday, August 30, 2026

ShortNews

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள "அம்பர்" எச்சரிக்கை - பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பான நிலை காணப்படும்!


வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள "அம்பர்" எச்சரிக்கை | பலத்த காற்று மற்றும் கடலின் கொந்தளிப்பான நிலை காணப்படும்.

இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சத்தியம் இருப்பதுடன் அப்பகுதியில் கடல் சீற்றமாகக் காணப்படும்.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 - 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »