Our Feeds


Friday, August 7, 2026

ShortNews

நேற்றைய மெகசின் சிறை மோதலில் கைதி ஒருவர் பலி!



கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (07) இரவில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த 11 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சிறைச்சாலைக்கு வௌியில் இருந்து பொதியொன்று எறியப்பட்ட நிலையில், அதனை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதாக கூறப்படுகின்றது. 

இதனையடுத்து சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் குழுவொன்று அமைதியின்மையை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஒன்பது கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார். 

சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நேற்று ஏற்பட்ட சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கும் முப்படை அதிகாரிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டதாகக் குறிப்பிட்டார். 

இதனிடையே, உருவாகியுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இன்றைய தினம் சிறைச்சாலையில் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »