Our Feeds


Thursday, August 27, 2026

ShortNews

இலங்கையை காப்பாற்றிய தினுஷ!


கொழும்பில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையின் இளம் வீரர் சொனல் தினுஷ அபார சதம் விளாசி, அணியை இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளுக்கு 503 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திய நிலையில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 213 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தொடர்ந்து விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையின் முன்வரிசை விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், சொனல் தினுஷ பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.

208 பந்துகளை எதிர்கொண்ட அவர், 6 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

முதல் இன்னிங்ஸிலும் 103 ஓட்டங்களைப் பெற்றிருந்த சொனல் தினுஷ, ஒரே டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

அணியின் நெருக்கடியான நிலையில் கேசர நுவந்தவுடன் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்கு 112 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்ட தினுஷ, இலங்கை அணியின் மீட்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். கேசர நுவந்த 46 ஓட்டங்களைப் பெற்றார்.

136 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 387 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முன்னிலையை இலங்கை அணி கடந்து, தற்போது 174 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளதுடன், போட்டி சமநிலையை நோக்கி நகர்ந்து வருகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »