Our Feeds


Saturday, August 15, 2026

SHAHNI RAMEES

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட ஐவரை விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல்

 


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்

  பணிப்பாளர் உள்ளிட்ட ஐவரை விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்தல்


📍📍📍📍📍📍📍📍📍📍📍📍📍

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட ஐந்து பேரை விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது. 

இந்த அறிவித்தல் நேற்று (14) வெள்ளிக்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

இந்த விசாரணைகள் எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. 

இந்த வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்கள், அவர்களின் கலாசார ஆடையினை அணிய தடைவிதிக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த வாரம் 6 முறைப்பாடுகள் தாக்கல் செய்யப்பட்டன. 

இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே இந்த அழைப்பாணை அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த அழைப்பாணை அறிவித்தல் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு கிடைக்கப் பெற்றதை அடுத்தே குறித்த முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »