அமெரிக்கா – ஈரான் போரின் தாக்கத்தால் பாகிஸ்தானில் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனை எதிர்த்து இன்று (08) நாடு தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தற்போது ஒரு லீற்றர் பெட்ரோல் 328 ரூபாய்க்கும், டீசல் 380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே எரிபொருளுக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளதால், விலைகள் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வை கண்டித்து ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி ஏற்பாடு செய்துள்ள போராட்டத்தில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, August 8, 2026
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
