இலங்கையின் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்புகள்
தொடர்பாக அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகளுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (09) கொழும்பில் நடைபெற்றது.நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, பிரதி அமைச்சர் முனீர் முலப்பர், பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி ஆகியோர் உலமா சபை நிர்வாகிகளைச் சந்தித்து, நீதித்துறையில் முன்னெடுக்கப்படும் மாற்றங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
முக்கியமாக, நீதித்துறை தொடர்பாக சமூகத்தில் பரப்பப்படும் தவறான தகவல்களைத் தெளிவுபடுத்தி, அரசாங்கத்தின் தற்போதைய முன்னேற்றங்களை இந்தச் சந்திப்பின் மூலம் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
