பொலிஸ்மா அதிபர் தொடர்பாக வெளியிட்ட கருத்து குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று (10) மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
வழங்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, இன்று காலை 10.30 மணிக்கு குறித்த பணியகத்தில் முன்னிலையாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காவல்துறை மா அதிபர் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து தவறாக வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
