Our Feeds


Thursday, August 13, 2026

ShortNews

‘பெக்கோ சமன்’ தாயார் மீதான துப்பாக்கிச்சூடு - மோட்டார் சைக்கிள் மீட்பு!


ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘பெக்கோ சமன்’ என்பவரின் தாயார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று ஊருபொக்க பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மாத்தறை - ஊருபொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »