இலங்கைக் கடற்படையின் டோரா (Dvora) கப்பல் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, இன்றும் (16) தேடுதல் நடவடிக்கைகள் தொடர்வதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.
மொறட்டுவை, அங்குலானை பகுதியை அண்மித்த கடற்பகுதியில் நேற்று (15) இலங்கை கடற்படைக்குச் சொந்தமான டோரா ரக படகு ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், நேற்று மீட்கப்பட்ட 11 கடற்படை வீரர்களும் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதுடன், அவர்களது உடல்நிலை சீராகவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விபத்துக்குள்ளான கடற்படைக் கப்பலை மீட்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், நிலவும் கொந்தளிப்பான கடல் சூழ்நிலை இதற்கு ஒரு பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
Sunday, August 16, 2026
கடற்படையின் டோரா படகு விபத்து - தொடரும் மீட்பு பணிகள்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
