பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
73 வயதான இம்ரான் கான், உடல்நலக் குறைவு காரணமாக உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கண், இதயம் உள்ளிட்ட வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் வைத்திய ரீதியாக நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கானின் வலது கண்ணில் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் முன்னதாக தெரிவித்திருந்தனர். அவரது வைத்திய பரிசோதனைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
