சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் மூலமாக இலங்கையர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் பாரிய அளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழிப் பண மோசடி தொடர்பிலான தகவல்களை இலங்கை கணினி அவசர கால பதிலளிப்புக் குழு கண்டறிந்துள்ளது.
இதுவரை திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த மோசடி நடவடிக்கைகள் இந்தியாவிலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கணினி அவசர கால பதிலளிப்புக் குழு கண்டறிந்துள்ளது.
மோசடி செய்பவர்கள் தாங்கள் இலக்கு வைக்கும் நபர்களைப் பற்றி முன்கூட்டியே நன்கு ஆராய்ந்து, அவர்களின் உறவினர்கள், உடன்பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களைத் தங்களது தொடர்பிலக்கங்கள் அல்லது நண்பர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்கின்றனர்.
வழக்கமாக, கவர்ச்சிகரமான ஒரு இளம் பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தும் அறிமுகமில்லாத இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து, பாதிக்கப்பட்ட நபருக்கு "ஹாய்" என்ற எளிய குறுஞ்செய்தி அனுப்பப்படுவதன் மூலமே இந்த அணுகுமுறை தொடங்குகிறது.
அந்த நபரிடமிருந்து பதில் வந்தால், மோசடிக்காரர்கள் பல நாட்களுக்கு உரையாடலைத் தொடர்ந்து நம்பிக்கையை கட்டியெழுப்ப முயல்கின்றனர்.
அதன் பின்னர், அந்த நபரைத் தூண்டி அவர்களின் அந்தரங்கப் படங்களைப் பகிருமாறு செய்கின்றனர் அல்லது வீடியோ அழைப்புகளில் பங்கேற்க வைக்கின்றனர்.
இவ்வாறு பெறப்படும் புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகளைப் பயன்படுத்தி, கேட்கும் பணத்தைக் தராவிட்டால் அவற்றை அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அல்லது நண்பர்களுக்கும் அனுப்பி விடுவதாக அச்சுறுத்தி பணப்பறிப்பில் ஈடுபடுகின்றனர் என இலங்கை கணினி அவசர கால பதிலளிப்புக் குழு தெரிவித்துள்ளது.
எனவே, அறிமுகமில்லாத கணக்குகள் அல்லது தொலைபேசி எண்களிலிருந்து வரும் குறுஞ்செய்திகள், நண்பர் கோரிக்கைகள் அல்லது அழைப்புகளுக்கு பதிலளிக்கும் போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவும்.
Saturday, August 8, 2026
இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண மோசடி - எச்சரிக்கை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
