Our Feeds


Friday, August 21, 2026

Zameera

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றம்

 

2026 சிறுபோக நெல் கொள்வனவுக்கு தேவையான 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கான குறைநிரப்பு பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


இந்தக் குறைநிரப்பு பிரேரணைய இன்று முற்பகல் விவசாய அமைச்சர் லால்காந்தவினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தது. 


கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதும், இந்த ஆண்டிற்குள் பயன்படுத்தப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்படுவதுமான 7,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுகளை நெல் கொள்வனவிற்காகப் பயன்படுத்துவதற்கே இந்த குறைநிரப்பு பிரேரணை சமர்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »