Our Feeds


Tuesday, August 11, 2026

ShortNews

வெள்ள நிவாரணம் கோரி பெனிதெனிய மக்கள் போராட்டம்!


‘டிட்வா’ புயல் மற்றும் அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பேராதனை, பெனிதெனிய பகுதி மக்கள், இதுவரை அரசாங்கத்திடமிருந்து உரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனக் கூறி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘டிட்வா’ புயலினாலும் பின்னர் பெய்த கனமழையினாலும் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதமடைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

பெனிதெனிய சந்தியில் ஒன்றுகூடிய மக்கள், தமது வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அரசாங்கத்திடமிருந்து போதிய நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினர்.

வீடுகளைத் துப்புரவு செய்வதற்காக வழங்கப்படும் 25,000 ரூபாய் நிவாரணத் தொகையும் சிலருக்கு மாத்திரமே கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தம்மில் பெரும்பாலானோர் சுயதொழில்களை நம்பியே வாழ்ந்து வந்ததாகவும், வெள்ளத்தில் தங்களது வாழ்வாதாரங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மக்கள், தற்போது தாங்கள் முற்றிலும் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக கவலை தெரிவித்தனர்.

எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உரிய நிவாரணங்களை உடனடியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »