இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை எளிதில் கடந்து செல்ல முடியாது என இலங்கை அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலியில் நடைபெற்ற நிலையில், இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
போட்டியின் நான்காவது இன்னிங்ஸிலும் வீரர்கள் கடுமையாக போராடியதாக தெரிவித்த அவர், இந்தத் தோல்வியை எளிதில் கடந்து செல்ல முடியாது என்றாலும், ஒட்டுமொத்தமாக இது ஒரு சிறந்த போட்டியாக அமைந்ததாக கூறினார்.
முதல் மூன்று நாட்களில் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருந்ததாகவும், நான்காவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடுவது கடினமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
எனினும், கே.எல். ராகுல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சிறப்பாக விளையாடி இலங்கை அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும், இந்திய அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியதுடன் அதிக ஓட்டங்களை குவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணி துடுப்பெடுத்தாடியபோது ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால், அங்கிருந்து போட்டி இந்திய அணியின் பக்கம் திரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.
Thursday, August 20, 2026
இலங்கை அணியின் தோல்வி குறித்து அணி தலைவர் கருத்து!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
