Our Feeds


Monday, August 24, 2026

SHAHNI RAMEES

உள் முரண்பாடுகளுக்கு இடமில்லை; நோயாளிகளுக்கே முன்னுரிமை - இன்று Dr. சுகுணன் ஆற்றிய உரை

 


இன்று. டொக்டர் சுகுணன் ஆற்றிய உரை 

உள் முரண்பாடுகளுக்கு இடமில்லை; நோயாளிகளுக்கே முன்னுரிமை

– கல்முனை வடக்கு வைத்தியசாலை பணிப்பாளர்.

(ஜலீல் ஜீ -

கல்முனை வடக்கு வளாகத்திலிருந்து)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குள் ஏற்படும் உள் முரண்பாடுகள் நோயாளிகளுக்கான சேவையைப் பாதிக்கக் கூடாது என பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் வலியுறுத்தியுள்ளார்.

 இன்று (24) விபத்தொன்றின் பின்னர் பணிக்கு திரும்பிய அவர், வைத்தியசாலை அதிகாரிகளை கூட்ட மண்டபத்தில் சந்தித்து உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார். 

பணிமாற்றம் மற்றும் சுகாதார சிற்றூழியர்கள் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட நிர்வாகச் சிக்கல்கள் காணப்பட்டாலும், வைத்தியசாலைச் சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதில் அனைத்து ஊழியர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

 நோயாளிகளின் நலனே மருத்துவப் பணியின் பிரதான நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »