நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட இராட்சத வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1127ஆக அதிகரித்துள்ளதாகவும் 4858 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கினால் பெருமளவு பாதிப்புகளை சந்தித்துள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இதுவரை 6541 பேர் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி காணாமற்போன 4858 பேரை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாகியிருக்கிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி வெளியான தகவலின்படி, சித்வான் பகுதியில் 348 பேரின் உடல்களும் நாவல்பராசி கிழக்கில் 217 பேரின் உடல்களும் நாவல்பராசி மேற்கில் 190 பேரின் உடல்களும் நுவாகோட் பகுதியில் 155 பேரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.
