Our Feeds


Thursday, September 24, 2026

Zameera

22 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று ஆர்ப்பாட்டம்


 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்பும் இன்று வியாழக்கிழமை (24) முன்னெடுக்கப்படவுள்ளது.


“ஜனநாயகத்தைச் சூறையாடும் 22 வேண்டாம்” எனும் கருப்பொருளின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம்  காலை 9 மணிக்கு  பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டை சர்வாதிகாரப் பாதைக்கு இட்டுச் செல்லும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார, சர்வாதிகாரப் பயணத்திற்கு வித்திடும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டமும் கவனயீர்ப்பும் நடத்தப்படுவதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.



இதற்கிடையில், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சுதந்திரப் போராட்ட மையம் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளதுடன்,  தற்போது நிலவும் சர்ச்சைக்குரிய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »