ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் நல்லூரில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நினைவேந்தல் நிகழ்வுகளின் 10ஆம் நாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (24) நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்றன.
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு பலரும் அஞ்சலி செலுத்தினர்.