Our Feeds


Thursday, September 24, 2026

Zameera

களு கங்கை ஆற்றுப்படுகை பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு

 


களு கங்கையின் குடா கங்கை உப ஆற்றுப்படுகை பகுதிகளுக்கு சீரற்ற வானிலையினால் விடுக்கப்பட்ட வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை மேலும் 48 மணி நேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.


கடந்த 20 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நிலவும் தொடர் மழை மற்றும் நீர்மட்டம் அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


புளத்சிங்கள, மதுராவல, மற்றும் பாலிந்தநுவர உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் மற்றும் குடா கங்கை, மகுரு கங்கை ஆற்றுப்படுகைகளில் வாழும் பொதுமக்கள் வெள்ளப் பெருக்கு அபாயம் குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகள், சிறிய ஒடுங்கிய வீதிகள் வெள்ள நீரினால் பாதைகள் மூழ்கும் அபாயம் உள்ளதால் வாகன சாரதிகள் கடுமையான எச்சரிக்கையுடன் வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மில்லகந்த நீர்மானி நிலையத்தில் குடா கங்கையின் நீர்மட்டம் தொடர்ந்து 'சிறியளவிலான வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை' மட்டத்திற்கு மேல் பதிவாகி வருவதால், ஆற்றுப் படுகைக்கு அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர ஆயத்தமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »