(செ.சுபதர்ஷனி)
அரச ஊவா முதலீட்டு வங்கியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைகேடு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய புதன்கிழமை (16) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அரச ஊவா முதலீட்டு வங்கியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைகேடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, நேற்றைய தினம் காலை 9.00 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி குற்றப்புலனாய்வு பிரிவின் நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
விசாரணை ஒன்றுக்காக வாக்குமூலம் அளிக்கும் பொருட்டே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நேற்றைய தினம் காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையானார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “விசாரணை ஒன்றுக்காகவே தான் அழைக்கப்பட்டதாகவும். உள்ளே சென்று அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னரே தெரிவிக்க முடியும். நான் எவ்வித மோசடியையோ அல்லது ஊழலையோ செய்யவில்லை" என தெரிவித்திருந்தார்.