Our Feeds


Sunday, September 13, 2026

SHAHNI RAMEES

இந்தோனேசியா: 240+ பயணிகளுடன் ஜாவா கடலில் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு!

 


இந்தோனேசியாவுக்குச் சொந்தமான ஜாவா கடல் பகுதியில்

இன்று (13) காலை காணாமல் போன பயணிகள் கப்பலை மீட்புக் குழுவினர் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.


அதன்படி, மீட்புக் குழுவினர் இதுவரை 103 பயணிகளை மீட்டுள்ளனர்.


எவ்வாறாயினும், விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 140 பயணிகள் காணாமல் போயுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


சுரபயா நகரிலிருந்து பன்ஜர்மசின் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தக் கப்பலில் விபத்து நேர்ந்தபோது 243 பயணிகள் பயணம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »