Our Feeds


Sunday, September 13, 2026

Zameera

நாடு முழுவதும் 730 சந்தேகநபர்கள் கைது

 


முழு நாடும் ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 730 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது 11 சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள், மொத்தம் 724 சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சுற்றிவளைப்புகளின் போது 423 கிராம் ஹெரோயினும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக 550 கிராம் ஐஸ் போதைப்பொருள், 405 கிராம் கஞ்சா மற்றும் 2,589 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »