Our Feeds


Wednesday, September 2, 2026

SHAHNI RAMEES

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குத்தாக்கல் - 8 பேருக்கு அழைப்பாணை

 


கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ

மற்றும் நிதிப் பீடத்தின் உயர் டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒருவர், பரீட்சை முறைகேடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட கால விரயம் மற்றும் பாதிப்புக்களுக்காக 5 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.


நுகேகொடை மாவட்ட நீதிபதி ஆர்.ஏ.என். ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர், முன்னாள் துணைவேந்தர், பீடாதிபதி, திணைக்களத் தலைவர் மற்றும் விரிவுரையாளர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.


குறித்த கற்கை நெறியின் சில பாடங்களில் சித்தியடையவில்லை என அறிவிக்கப்பட்ட மாணவர்கள், எந்தவித மீள் பரீட்சையும் இன்றி பின்னர் எவ்வாறு சித்தியடைந்ததாக மாற்றப்பட்டனர் என்பது தொடர்பில் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது குறித்த விளக்கங்களை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


பரீட்சை வினாத்தாள் கசிவு, முறையற்ற புள்ளியிடல் மற்றும் கையூட்டல் கோரியமை போன்ற குற்றச்சாட்டுக்களை மனுதாரர் முன்வைத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »