Our Feeds


Monday, September 21, 2026

Zameera

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

 


கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான அதிக மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து, நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.



இதன்படி, மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும், நிலைமை தொடர்பில் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


மண்சரிவு அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்குத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, மழைவீழ்ச்சி தொடரும் பட்சத்தில் மண்சரிவு அபாயம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.


அபாயகரமான பகுதிகள் மற்றும் மாவட்டங்கள்


கட்டம் 3 - சிவப்பு எச்சரிக்கை (வெளியேறுவதற்கான எச்சரிக்கை) 


காலி: நெலுவ

களுத்துறை: வலல்லாவிட்ட

கண்டி: பஸ்பாகே கோரளை 

கேகாலை: மாவனெல்லை, தெரணியகலை, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட 

நுவரெலியா: நோர்வுட், கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, கொத்மலை மேற்கு 

இரத்தினபுரி: இரத்தினபுரி 

கட்டம் 2 - அம்பர் எச்சரிக்கை (அவதானமாக இருப்பதற்கான எச்சரிக்கை) 


கொழும்பு: பாதுக்கை 

காலி: நாகொட, தவலம 

களுத்துறை: பாலிந்தநுவர, அகலவத்தை, புளத்சிங்ஹல, இங்கிரிய 

கண்டி: கங்க இஹல கோரளை, உடபலாத 

கேகாலை: வரக்காப்பொல, புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, கேகாலை, ருவன்வெல்ல 

மாத்தறை: அத்துரலிய, கொடப்பொல, அக்குரஸ்ஸ, பிட்டபத்தர 

நுவரெலியா: தலவாக்கலை 

இரத்தினபுரி: பெல்மடுல்ல, குருவிட்ட, அயகம, நிவித்திகல, கலவானை, எலபாத 

கட்டம் 1 - மஞ்சள் எச்சரிக்கை (விழிப்புடன் இருப்பதற்கான எச்சரிக்கை) 


கொழும்பு: சீதாவக்க 

காலி: நியகம, பத்தேகம 

கம்பஹா: மீரிகம, அத்தனகல்ல 

கண்டி: யடினுவர, பாஹததும்பர, தொலுவ, உடுனுவர 

கேகாலை: ரம்புக்கனை 

குருநாகல்: அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல, மல்லவப்பிட்டிய 

மாத்தறை: பஸ்கொட 

இரத்தினபுரி: எஹெலியகொட, கஹவத்தை, கொலோன்ன, இம்புல்பே

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »