Our Feeds


Saturday, September 19, 2026

Zameera

வாகனப் பதிவு, போக்குவரத்து முறைப்பாடுகளுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்


 (எம்.மனோசித்ரா)


மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் வீதிகளில் இயங்கும் வாகனங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் புகார்களைத் தெரிவிப்பதற்காகப் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.


மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இச்சேவையின் மூலம் பொதுமக்கள் தங்களது எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை இனி 074 245 3300 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும்.


வாகனப் பதிவின் போது ஏற்படும் காலதாமதங்கள், சேவைச் சிக்கல்கள் மற்றும் வாகனங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும் நோக்கிலேயே இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »