Our Feeds


Friday, September 25, 2026

Zameera

இன்றைய வானிலை


 வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமானது நலிவடைந்து தாழ் அமுக்கமாக இந்தியாவை நோக்கி செல்கின்றது. இதன் தாக்கமானது இன்று முதல் படிப்படியாக குறைவடையக்கூடும்.



மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 km வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.


இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


கடல் பிராந்தியங்களில்  


வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த சக்தி வாய்ந்த தாழ் அமுக்கமானது இலங்கையை விட்டு நகர்ந்து இந்தியாவின் தென் ஒடிசாவுக்கும் ஆந்திரப் பிரதேசத்தின் வட பகுதிக்கும் இடையாக செல்கின்றது.


இதன் தாக்கத்தின் காரணமாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில்  இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதுடன் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 - 80 km வேகத்தில் பலத்த காற்றும் வீசக் கூடும். இக் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆகையினால் இக் கடல் பிராந்தியத்திற்கு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மறு அறிவித்தல் வரையில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.


காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.உள்ளூர் சுற்றுலா ஆராய்க


கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 - 40 km வேகத்தில்   தென்மேற்குத் திசையில் இருந்து  காற்று வீசும். 


திருகோணமலை தொடக்கம்   காங்கேசன்துறை, மன்னார், புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான அத்துடன் காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 - 65 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும்.


புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும்.


இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »