Our Feeds


Friday, September 25, 2026

Zameera

தையிட்டி விகாரை வழக்கு விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு


 தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




வேலன் சுவாமிகள், தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பலாலி பொலிஸாரால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.




குறித்த வழக்குகள் நேற்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.




விசாரணைகளைத் தொடர்ந்து, வழக்குகளின் அடுத்த கட்ட விசாரணையை 2027 ஜனவரி 7ஆம் திகதிக்கு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »