Our Feeds


Monday, September 28, 2026

Zameera

சபாநாயகர் இல்லம் தொடர்பில் விசாரணை


 (இராஜதுரை ஹஷான்)


சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக அந்த இல்லத்தின் பராமரிப்பாளர் இவ்வாரம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.


அத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களுடனும் உத்தியோகபூர்வ இல்ல பராமரிப்பாளரை ஆணைக்குழுவின் விசேட விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு பாராளுமன்றத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இதற்கமைய, சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் பராமரிக்கப்பட்டு வரும் ஊழியர் பதிவேடுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்கள், மின்சாரம், நீர் மற்றும் ஏனைய சேவை கட்டணங்கள் தொடர்பான பற்றுச்சீட்டுக்கள்  மற்றும் ஆவணங்களை விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு மேலும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன சமர்ப்பித்த முறைப்பாட்டிற்கு அமைவாக, 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, பாராளுமன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் (நிர்வாகம்) உள்ளிட்ட மூன்று உயர் அதிகாரிகளிடம் இலஞ்ச ஊழல்  ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »