Our Feeds


Thursday, September 10, 2026

Zameera

நாமலின் கைதுக்கான சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை

 


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் எவையும் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக ஊழல் தடுப்புச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்திய அவர், நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளின் போது முன்வைக்கப்படும் சாட்சியங்கள் குறித்து எவ்வித நம்பிக்கையும் கொள்ள முடியாது எனச் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அபேகோன் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »