Our Feeds


Saturday, September 12, 2026

Zameera

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

 


டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான  போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


 


சந்தேக நபர் இன்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 


இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


 


குறித்த சந்தேக நபர் நேற்று (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.


 


ஷிரான் பாஸிக் என்பவரினால் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்டதாகக் கூறப்படும் 3 கோடி ரூபா பணத்தைச் செலவிட்டு கம்பஹா பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 


இச்சம்பவம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »