Our Feeds


Saturday, September 5, 2026

Zameera

முள்ளிப்பொத்தானை பாடசாலையில் கட்டட வசதியின்றி மாணவர்கள் அவதி


 கிண்ணியா வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டட வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


ஏனைய பாடசாலை மாணவர்களைப் போலவே இப் பாடசாலைச் சிறுவர்களும் சிறந்த கல்வியைப் பெறுவதற்கான உரிமை கொண்டவர்கள் என்பதால், அவர்களுக்கான பொருத்தமான கற்றல் சூழலை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பாடசாலைக்குக் கிடைக்க வேண்டிய கல்வி வளங்கள் மற்றும் கட்டிட வசதிகளைச் சரியான முறையில் பங்கீடு செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


இப் பாடசாலையின் கல்வி வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் மாகாணக் கல்வித் திணைக்களம், மாகாணக் கல்வி அமைச்சு மற்றும் கிண்ணியா கல்வி வலய அதிகாரிகள் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு உரிய தீர்வை விரைவாக வழங்கிடுமாறு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »