Our Feeds


Saturday, September 12, 2026

Zameera

மழையால் மின் உற்பத்திச் செலவு குறைவு

 


(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


அதிக மழைவீழ்ச்சி கிடைத்தமையால் மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.இதன் காரணமாக அடுத்த காலாண்டிற்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தேவையில்லை.அதற்கமைய மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்  அநுர கருணாதிலக தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது  ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,


கடந்த காலத்தில் அதிக மழைவீழ்ச்சி கிடைத்தமையால் மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.இதன்காரணமாக அடுத்த காலாண்டிற்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தேவையில்லை.அதற்கமைய மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை.



 எதிர்வரும் ஆண்டின் முதல் 3 மாதங்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வலுசக்தி அமைச்சினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


 எதிர்பார்த்ததை விட அதிக மழைவீழ்ச்சி கிடைத்ததன் காரணமாக,மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்தது. இதற்கமைய,அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக எந்த வகையிலும் கோரிக்கை விடுக்க எதிர்பார்க்கவில்லை.


புதுப்பிக்கத்தக்க சக்தி சேமிப்புக்காக பயன்படுத்தப்படும் மின்கலன்களுக்கு (டியவவநசநைள) முறைசாரா சலுகைகளை வழங்க அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்தார். முதற்கட்டமாக 100 கிலோவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட அமைப்புகளுக்கு இந்தச் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.


இலங்கையின் தற்போதைய புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தி முன்னேற்றகரமாக காணப்படுகிறது.மின்சார உற்பத்தியில் 60 சதவீதம்  முதல் 70 சதவீதம்  வரையிலான பங்கு தற்போது புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்தே பெறப்படுகிறது.


கூரைமீது பொருத்தப்படும் சூரியமின் சக்தி  மூலம் சுமார் 2,500 மெகாவாட்டும்,தரையில் அமைக்கப்படும் சூரியமின் சக்தி மூலம் 530 மெகாவாட்டும்,காற்றுவழி மின் உற்பத்தி மூலம் 250 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சாரமும் பெறப்படுவதாகவும், இது மொத்த மின் உற்பத்தியில் 40 சதவீதத்துக்கும் அதிகம்.


சூரியமின் திட்டங்களுக்கான அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதங்கள், நிலங்களைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் மற்றும் புதிய மின் உற்பத்தி அமைப்புகளை தேசிய மின்வரிசையுடன் இணைப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட இத்துறை சார்ந்த சவால்களையும்  ஏற்றுக்கொள்கிறோம். அவற்றுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியின் வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு, முறையான தரநிலைகளுடன் கூடிய மின்கல சேமிப்பு முறையை அறிமுகப்படுத்துவதோடு, இந்தச் சிக்கல்களுக்கும் தீர்வுகாண்பது மிகவும் முக்கியமானது  என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »