Our Feeds


Friday, October 30, 2026

Zameera

போஸ்னியாவில் ஐரோப்பிய ஒன்றிய அமைதிப்படை ஹெலிகொப்டர் விபத்து: நால்வர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

 

போஸ்னியா வடக்குப் பகுதியில் உள்ள பிர்ச்கோ பிராந்தியத்தில் வியாழக்கிழமை (29) ஐரோப்பிய ஒன்றிய அமைதிப்படையின் இத்தாலிய CH-47 சினூக் இராணுவ ஹெலிகொப்டர் பயிற்சி நடவடிக்கையின்போது விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.



விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் 15 பேர் பயணித்த நிலையில், அவர்களில் இரு இத்தாலிய இராணுவ வீரர்களும் இத்தாலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் இராணுவப் பிரிவைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.


காயமடைந்த 11 பேரும் பிர்ச்கோ மற்றும் துஸ்லா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, அவர்களின் நிலைமை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்து இடம்பெற்ற பிர்ச்கோ பிராந்தியத்தின் கொரிஸ் பகுதியில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ஐரோப்பிய ஒன்றிய அமைதிப்படை தெரிவித்துள்ளது.


மேலும், பொதுமக்கள் எவரும் காயமடையவில்லை என்பதுடன், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


விபத்துக்கான துல்லியமான காரணத்தை கண்டறிவதற்காக முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அமைதிப்படை தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »