Our Feeds


Tuesday, October 20, 2026

Zameera

தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் : 13 உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழு நியமனம்

 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)



2025–2029 தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தின்' கீழ் பாராளுமன்றத்துக்கு பொறுப்பளிக்கப்பட்ட பணிகளை நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் அதற்கான தலைமையை வழங்குவதற்காக குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர  தலைமையில் 13 உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (20) கூடிய போது  தீர்மானங்களை சபைக்கு அறிவிக்கையில்  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன   மேற்கண்டவாறு அறிவித்தார்.


பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுவின் தீர்மானத்திற்கு அமைய, இக்குழுவிற்காக  அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார,பிரதியமைச்சர் சுனில் வடகல, பிரதியமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே. சி. அலவத்துவல,அனுராத ஜயரத்ன, சாணக்கியன் இராசமாணிக்கம், ஓஷனி உமங்கா,பிரகீத் மதுரங்க, சந்திம ஹெட்டியாரச்சி, தர்மப்பிரிய விஜேசிங்க, தேவானந்த சுரவீர மற்றும் எம். நிஸாம் காரியப்பர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »