(எம்.மனோசித்ரா)
பிராந்தியத்தில் நிலவிவரும் பாதுகாப்பு நிலைமையை உன்னிப்பாகக் கருத்திற்கொண்டு, சவூதி அரேபியாவின் தம்மாம் மற்றும் கொழும்புக்கு இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பிராந்தியத்தில் உரிய பாதுகாப்புச் சூழல் உறுதிப்படுத்தப்பட்டு, வணிகரீதியான விமானச் சேவைகளைத் தொடர்வதற்கு உகந்த நிலை காணப்படுகிறது என மதிப்பிடப்பட்டவுடன் சேவைகள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கன் எயாலைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விமான இரத்து மற்றும் தற்காலிக இடைநிறுத்தம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் மாற்று ஏற்பாடுகளைப் பெற்றுக்கொள்ள, 1979 (இலங்கைக்குள்), 1094 11 777 1979 (சர்வதேச நாடுகளிலிருந்து), 1094 74 444 1979 (வட்சப் - குறுஞ்செய்திகள் மாத்திரம்), அல்லது என்ற www.srilankan.com இணையத்தளம் என்பவற்றின் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தங்களின் பயணத் திட்டங்களை இதற்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
