Our Feeds


Monday, October 12, 2026

Zameera

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் இராஜினாமா!

 

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக் அபேசிங்க ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


 


இது தொடர்பில் அவர், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


 


ஐக்கிய மக்கள் சக்தியில் தாம் வகித்து வந்த, குருணாகல் தொகுதியின் பிரதான அமைப்பாளர் பதவி, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர், ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவரின் தொழிற்சங்க ஒருங்கிணைப்புச் செயலாளர் மற்றும் சபை ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆகிய அனைத்துப் பதவிகளிலிருந்தும் இன்று முதல் (12) அமுலாகும் வகையில் விலகுவதாக தெரிவித்துள்ளார்.


 


ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த காலத்திலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தும் தங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைவதுடன், தாங்கள் எனக்கு வழங்கிய ஆதரவிற்கும் சந்தர்ப்பங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »