Our Feeds


Wednesday, October 28, 2026

Zameera

ஜின் கங்கையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு!

 


ஜின் கங்கை ஆற்றுப் படுகையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பாரிய மழை வீழ்ச்சியினால், தாழ்நிலப் பகுதிகளில் ஏற்படக்கூடிய சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு அபாயத்தைக் கருத்தில் கொண்டு, நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.


அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


தவலம, நாகொடை, பத்தேகம,  வெலிவிட்டிய-திவிதுர ஆகிய பிரதேசச் செயலகப் பிரிவுகள் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட பிரதேசச் செயலகப் பிரிவுகளில் வாழும் பொதுமக்கள் சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து, மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


குறிப்பாகச் சிறிய மற்றும் தாழ்நில வீதிகள் வழியே பயணிக்கும் வாகன சாரதிகள் வெள்ளப் பெருக்கு அபாயத்தினால் கூடுதல் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்பத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »