Our Feeds


Wednesday, October 28, 2026

Zameera

காணாமல்போன 23 கொள்கலன்கள் குறித்து விசாரணைக்கு மேலும் 3 மாதங்கள் தேவை – சுரேன் ராகவன்!

 

காணாமல்போன 23 கொள்கலன்கள்  குறித்துக் கண்டறிவதற்கு இன்னும் மூன்று மாத கால அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபசெயலாளர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைப்பி குறிப்பிட்டார.


வரவிருக்கும் மூன்று போயா தினங்களின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், 


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான் என்பதைத் தாங்கள் நன்கறிந்திருந்த போதிலும், அவர்கள் மீது எவ்வித கோபமும் கொள்ளவில்லை.


அரசாங்கத்தின் 'சட்டத்தின் ஆட்சி' குறித்த வாக்குறுதியை விமர்சித்த அவர், "அனைவருக்கும் சட்டம் சமமானது என்று ஜனாதிபதியால் இனிமேலும் கூற முடியாது" எனக் குறிப்பிட்டார்.


அதேவேளை, சிறைச்சாலையில் உள்ள பௌத்த பிக்குகளின் சட்ட நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட ஏனைய பிக்குகள் பகிரங்கமாகச் செல்லும்போது, அவர்களின் துறவற வாழ்க்கைக்குரிய காவி உடையை அணியக்கூடிய வகையில் 48 மணி நேரத்திற்குள் அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவந்ததற்காகத் தனது நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.


நாட்டின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், லீசிங் வசதிகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான கடன் வட்டி விகிதங்கள் இன்னமும் அதிகமாகவே வசூலிக்கப்படுகின்றன.


நாட்டின் பொருளாதாரம் இவ்வாறானதொரு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போதே, அமர்ந்து செல்வதற்கான வாகனங்கள் பழுதடைந்துள்ளதைக் காரணம் காட்டி, 1,750 புதிய வாகனங்களைக் கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி மூன்று முறை வலியுறுத்திக் கூறியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »