Our Feeds


Friday, October 2, 2026

SHAHNI RAMEES

'அடா' மற்றும் மனைவியின் ரூ. 44.5 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்!

 


போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக

கண்டறியப்பட்ட 44.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி மற்றும் இரண்டு மாடி வீடு உள்ளிட்ட சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


இதற்கமைய, குறித்த சொத்துக்கள் தொடர்பில் இன்று (2) முதல் அமுலுக்கு வரும் வகையில், 14 வேலை நாட்களுக்கு எவ்வித கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ள முடியாதவாறு அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. 


'அடா' என அழைக்கப்படும் ரணசிங்க ஆரச்சிகே சமன் குமார மற்றும் அவரது மனைவியான சங்கீதா பிரியதர்ஷனி ஆகியோருக்கு எதிராக, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன. 


சங்கீதா பிரியதர்ஷனி என்பவரின் பெயரில் பஹல கடுனேரிய பகுதியில் உள்ள 24.80 பேர்ச்சஸ் காணி 95 இலட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்டு, பின்னர் அதில் சுமார் 3.5 கோடி ரூபாய் செலவில் இரண்டு மாடி வீடு கட்டப்பட்டுள்ளமை விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. 


எனவே, 2006ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் (2011ஆம் ஆண்டின் 40ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 2026ஆம் ஆண்டின் 16ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் திருத்தப்பட்டவாறு) 7(1) பிரிவுக்கு அமைய, குறித்த சொத்துக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் மேலதிக கொடுக்கல் வாங்கல்களைத் தடுக்கும் வகையில், இன்று (2) முதல் 14 வேலை நாட்களுக்கு அவை இவ்வாறு முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »