Our Feeds


Wednesday, October 21, 2026

SHAHNI RAMEES

கடந்த ஆண்டில் 455 காட்டு யானைகள் உயிரிழப்பு!


நாட்டில் 2025 ஆம் ஆண்டில் மாத்திரம்

455 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மனித-யானை மோதல்கள் மற்றும் காட்டு யானைகளின் பாதுகாப்புத் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலமாகவே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


2024 ஆம் ஆண்டில் 388 காட்டு யானைகள் உயிரிழந்திருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் இவைகளின் மரண எண்ணிக்கை 455 ஆக அதிகரித்துள்ளது.


2025 ஆம் ஆண்டில் காட்டு யானைத் தாக்குதல்களால் 160 மனிதர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 221 பேர் காயமடைந்துள்ளனர்.


மனித-யானை மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 5,787.89 கிலோ மீற்றர் நீளத்திற்கு மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் மின்வேலி அமைப்பதற்காக 618.89 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் எல்.எம். அபேவிக்ரம எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி இந்தத் தரவுகளைச் சமர்ப்பித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »