Our Feeds


Thursday, October 22, 2026

Zameera

48சிசி மோட்டார் சைக்கிள்களுக்கும் பதிவு கட்டாயம் – மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்

 

48சிசி இயந்திரத் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பொது வீதிகளில் பயன்படுத்துவதற்கு முன்பு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.




சில விற்பனையாளர்கள் இவ்வகை மோட்டார் சைக்கிள்களுக்குப் பதிவு தேவையில்லை என வாடிக்கையாளர்களிடம் தெரிவித்து வருவதாகக் கவனிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களைப் பொது வீதிகளில் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் பொலிஸாரால் பிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படலாம் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் துஷாரா இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.




மேலும், வாகனங்களைப் பொது வீதிகளில் பயன்படுத்துவதற்கு முன்பு அவை தொடர்புடைய சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்துமாறும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »