Our Feeds


Tuesday, October 6, 2026

Zameera

சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ச

 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்ற பின்னர் 5ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இலங்கை திரும்பியுள்ளார்.


கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த அவர், மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி சிங்கப்பூர் சென்றிருந்தார்.


இந்நிலையில், நாடு திரும்பியவுடன் தாம் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவித்து, அதற்கு முன்னதாக பிணை வழங்குமாறு கோரி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில்  திங்கட்கிழமை (5) முன்பிணை மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.


ஷிரந்தி ராஜபக்ச தலைமையில் இயங்கிய ‘சிறிலிய சவிய’ அமைப்புடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இந்த விசாரணைகளின் ஒரு பகுதியாக ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவும் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »