Our Feeds


Monday, October 5, 2026

SHAHNI RAMEES

மத்திய கிழக்கு போர்ச் சூழலிலும் தடையற்ற எரிபொருள், மின்சார விநியோகம் உறுதி - அமைச்சர் நளிந்த தெரிவிப்பு!

 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிவரும் போர்

பதற்றங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியிலும், இலங்கையின் பொருளாதாரத்தை முடங்கவிடாமல் தடையற்ற எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தை அரசாங்கம் வெற்றிகரமாக உறுதிசெய்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இலங்கை சுற்றுலா வழிகாட்டி


இன்று திங்கட்கிழமை (05) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் மசகு எண்ணெய் உட்கட்டமைப்புகள், எரிபொருள் கப்பல்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வருகின்றன. எரிபொருளை இறக்குமதி செய்யும் ஒரு நாடாக, போர்ச் சூழலில் சாதாரண முறையில் இறக்குமதிகளை மேற்கொள்வதில் தடங்கல்கள் நிலவுகின்றன.



அரசாங்கத்தின் பிரதான இலக்கு, நாட்டின் பொருளாதாரத்தை ஒரு நாள் கூட முடக்காமல் தொடர்ச்சியான எரிபொருள் மற்றும் மின்சார விநியோகத்தை வழங்குவதாகும்.


அதனை அரசாங்கம் வெற்றிகரமாகச் செயற்படுத்தியும் உள்ளது. நவம்பர் 12 ஆம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ள அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்காக மாத்திரம் மூலதன நிதியாக 2,000 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.


அத்துடன், சட்ட அமுலாக்கம் மற்றும் நிதி குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. பொலிஸ், குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றின் விசாரணைகளைத் தொடர்ந்து சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்கிறது.


சட்டம் அமுல்படுத்தப்பட்டு குற்றவாளிகள் விளக்கமறியலில் வைக்கப்படும் போது வெளியில் கூட்டங்களையோ கருத்தரங்குகளையோ நடத்திப் புலம்புவதில் அர்த்தமில்லை.


குற்றம் செய்தவர்கள் நீதிமன்றம் அளிக்கும் வழங்கும் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் வாதிட முடியும்; நீதிமன்றம் இருதரப்பு நியாயங்களையும் கேட்டறிந்த பின்னரே நீதியான தீர்ப்பை வழங்கும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »