Our Feeds


Friday, October 9, 2026

SHAHNI RAMEES

ஹூதிகள் அட்டாக் - ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை இடைநிறுத்தம்!

 


சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான தனது

விமான சேவைகளை நாளை (10) வரை ரத்து செய்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நடவடிக்கை எடுத்துள்ளது.


 


மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலைகளே இந்தத் தீர்மானத்துக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


 


இதேவேளை, ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து ரியாத் நகரை நோக்கிச் செல்லும் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »