ஐந்து மாவட்ட செயலகங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (19) முதல் மோட்டார் சைக்கிள் பதிவு சேவைகள் புதிதாக தொடங்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட செயலகங்களிலேயே இந்த புதிய வசதிகள் கிடைக்கப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட அளவில் இயங்கும் இந்த அலுவலகங்களின் ஊடாக மோட்டார் சைக்கிள் பதிவு செய்யும் சேவைகளுக்கான அணுகலை விரிவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
