நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (18) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையானது, நாளை (19) திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும்.
அதன்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமான, பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களை இயன்றவரை குறைப்பதற்குத் தேவையான தற்காப்பு நடவடிக்கைகளைப் பொதுமக்கள் உடனடியாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
