திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேசத்தில் பெரும் போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்காக விவசாயிகள் தமது வயல் நிலங்களைச் சமப்படுத்தி, விவசாய நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்தி வருகின்றனர்.
இயந்திரம் மூலமாகவும் மனிதவளங்களை கொண்டும் நிலங்களை சமப்படுத்தி வருகின்றதை அவதானிக்க முடிகிறது.
பெரும் போக நெற்செய்கைக்கான ஆரம்பகட்டப் பணிகளின் ஒரு பகுதியாக வயல் நிலங்களை உழுதல், நிலங்களைச் சமப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், உரிய காலத்தில் பெரும் போக நெற்செய்கையை ஆரம்பிக்கும் நோக்கில் விவசாயிகள் தமது வயல் நிலங்களைத் தயார்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்பலகாமம் பிரதேசத்தின் பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிப்பதுடன், அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும் நெற்செய்கை பிரதான இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
